சமூக வலைத்தளம் மூலம் 3 தலைமை ஆசிரியைகளுக்கு பாலியல் தொல்லை; கல்வி அதிகாரி பணியிடை நீக்கம்


சமூக வலைத்தளம் மூலம் 3 தலைமை ஆசிரியைகளுக்கு பாலியல் தொல்லை; கல்வி அதிகாரி பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 8 Oct 2021 8:03 PM GMT (Updated: 8 Oct 2021 8:03 PM GMT)

சமூக வலைத்தளம் மூலம் 3 தலைமை ஆசிரியைகளுக்கு பாலியல் தொல்லை; கல்வி அதிகாரி பணியிடை நீக்கம்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் 3 தலைமை ஆசிரியைகள் மாவட்ட கல்வி அலுவலர் கீதாவை சந்தித்து புகார் மனு கொடுத்தனர்.

அதில் வேடசந்தூர் வட்டார கல்வி அலுவலர் அருண்குமார் தனது செல்போனில் இருந்து வாட்ஸ்-அப், முகநூல் ஆகிய சமூக வலைத்தளம் மூலம் தகவல் அனுப்பி தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறியிருந்தனர். இதற்கான ஆதாரங்களையும் அவர்கள் சமர்ப்பித்தனர்.

இதுதொடர்பாக அவர் வட்டார கல்வி அலுவலர் அருண்குமாரிடம் விசாரணை நடத்தி, விசாரணை அறிக்கையை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கருப்பசாமியிடம் அவர் சமர்ப்பித்தார். அதன்பேரில் அவர் இருதரப்பினரிடமும் மேல் விசாரணை நடத்தினார். இதையடுத்து அவர் நேற்று வட்டார கல்வி அலுவலர் அருண்குமாரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

Next Story