உள்ளாட்சி 2-ஆம் கட்ட தேர்தல்: 73.27 சதவீத வாக்குப்பதிவு


உள்ளாட்சி 2-ஆம் கட்ட தேர்தல்: 73.27 சதவீத வாக்குப்பதிவு
x
தினத்தந்தி 9 Oct 2021 3:18 PM GMT (Updated: 9 Oct 2021 3:19 PM GMT)

உள்ளாட்சி 2 ஆம் கட்ட தேர்தலில் 73.27 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சீபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. முதல்கட்ட தேர்தல் 6-ந் தேதி நடந்து முடிந்தது.  இந்த நிலையில், 2-ஆம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்றது. 

காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள்  வரும் 12 ஆம் தேதி எண்ணப்பட உள்ளது. 2 ஆம் கட்ட தேர்தலில் 73.27-சதவீத வாக்குகள் பதிவானதாக தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

Next Story