வாக்கு எண்ணிக்கையில் விதிமீறல்கள் நடந்துள்ளது - தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்


வாக்கு எண்ணிக்கையில் விதிமீறல்கள் நடந்துள்ளது - தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்
x
தினத்தந்தி 13 Oct 2021 4:24 AM GMT (Updated: 2021-10-13T09:54:01+05:30)

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் விதிமீறல்கள் நடந்துள்ளது என அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில், பெரும்பாலான இடங்களை தி.மு.க. கைப்பற்றியுள்ளது. 

இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் விதிமீறல்கள் நடைபெற்று உள்ளதாக அதிமுக சார்பாக மாநில தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் அதிமுக வழக்கறிஞர் அணி இணை செயலாளர் பாபு முருகவேல் நேற்று புகார் மனுவை அளித்து உள்ளார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய பாபு முருகவேல், வாக்கு எண்ணிக்கை மையங்களில் அ.தி.மு.க. முகவர்கள் அனுமதிக்கப்படவில்லை. பெரும்பான்மையான இடங்களில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படவில்லை’ என்றார்.

மேலும், உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள அ.தி.மு.க.-வினருக்கு சான்றிதழ் வழங்கப்படவில்லை என்றும் பாபு முருகவேல் குற்றஞ்சாட்டினார். 

Next Story