மாநில செய்திகள்

ஆயுத பூஜையையொட்டி கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் மீது கடும் நடவடிக்கை + "||" + Strict action on Omni buses charging extra for armed pooja

ஆயுத பூஜையையொட்டி கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் மீது கடும் நடவடிக்கை

ஆயுத பூஜையையொட்டி கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் மீது கடும் நடவடிக்கை
கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
சென்னை,

போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன் தலைமையில் கடந்த 11.10.2021 அன்று தலைமைச்செயலகத்தில் தீபாவளி பண்டிகை சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்தல் சம்பந்தமான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

அதில், அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை விழாக்காலங்களை முன்னிட்டு மக்கள் அதிக அளவில் சொந்த ஊர் செல்லும்போது ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்க வாய்ப்பு உள்ளது.


சிறைபிடிக்கப்படும்

எனவே, போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் உத்தரவின்படி, 13.10.2021 முதல் 20.10.2021 வரை தமிழகம் முழுவதும் ஆம்னி பஸ்களுக்கான சிறப்பு சோதனைகளை மேற்கொள்ள அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் சரக அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விதிகளை மீறி இயக்கப்படும் வாகனங்களுக்கு உரிய அபராதம் விதிக்கப்படும். அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் மற்றும் தமிழ்நாட்டுக்கு உரிய வரி செலுத்தாத ஆம்னி பஸ்கள் சிறைபிடிக்கப்படும் என எச்சரிக்கை செய்யப்படுகிறது.

பொதுமக்கள் ஆம்னி பஸ்கள் தொடர்பான புகார்களை 18004256151 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் பதிவு செய்யலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இலங்கை கடற்படை கைது செய்துள்ள: தமிழக மீனவர்கள் 23 பேரை விடுவிக்க எல்.முருகன் நடவடிக்கை
இலங்கை கடற்படை கைது செய்துள்ள: தமிழக மீனவர்கள் 23 பேரை விடுவிக்க எல்.முருகன் நடவடிக்கை வெளியுறவுத்துறை மந்திரிக்கு கடிதம் எழுதினார்.
2. ஆயுதபூஜை பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை: சென்னையில், 3 இடங்களில் இருந்து வெளியூர்களுக்கு பஸ்கள் இயக்கம்
ஆயுதபூஜை பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி, சென்னையில் 3 இடங்களில் இருந்து வெளியூர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. பயணிகளும் ஆர்வமுடன் பஸ்களில் புறப்பட்டு சென்றதால் கூட்டம் அலைமோதியது.
3. பள்ளிக்கல்வித்துறையில் வேலை: போலி அரசாணை வழங்கி மோசடி செய்யும் கும்பல் மீது நடவடிக்கை
சென்னை பள்ளிக்கல்வித்துறையில் வேலை வாங்கி தருவதாக, போலி அரசாணைகளை வழங்கி லட்சக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
4. தமிழகத்தில் டெங்கு பரவலை தடுக்க நடவடிக்கை; அமைச்சர் மா. சுப்பிரமணியன்
தமிழகத்தில் டெங்கு பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
5. புழல் ஏரியில் வெள்ளத்தடுப்பு நடவடிக்கை: சென்னை மாநகருக்கு 1,000 மில்லியன் லிட்டர் குடிநீர் வினியோகம்
சென்னை மாநகருக்கு அதிகபட்சமாக 1,000.58 மில்லியன் லிட்டர் குடிநீர் நேற்று வினியோகம் செய்யப்பட்டது. இதற்கு பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.