என்ஜினீயரிங் முதற்கட்ட கலந்தாய்வு இன்றுடன் நிறைவு

என்ஜினீயரிங் முதற்கட்ட கலந்தாய்வு இன்றுடன் நிறைவைடைய உள்ளது.
சென்னை,
என்ஜினீயரிங் படிப்புகளில் காலியாக இருக்கும் ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 870 இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நிறைவு பெற்ற நிலையில் அதில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் நிரம்பின.
அதனைத் தொடர்ந்து பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு கடந்த மாதம் 27-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 4 சுற்றுகளாக கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இதில் ஏற்கனவே 3 சுற்றுகள் கலந்தாய்வு முடிவடைந்த நிலையில், இன்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) 4-வது சுற்று கலந்தாய்வு முடிவடைய இருக்கிறது. இதன் மூலம் முதற்கட்ட கலந்தாய்வும் நிறைவு பெறுகிறது.
ஏற்கனவே ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 870 இடங்களில் 61 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களை மாணவ-மாணவிகள் தேர்வு செய்திருந்த நிலையில், தற்போது முடிவடையும் 4-வது சுற்று கலந்தாய்வில் எவ்வளவு மாணவர்கள் இடங்களை தேர்வு செய்கிறார்கள்? என்ற விவரத்தை தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை அலுவலகம் தெரிவிக்கும்.
முதற்கட்ட கலந்தாய்வை தொடர்ந்து துணை கலந்தாய்வு குறித்த அறிவிப்பும் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. அதற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு வருகிற 20-ந்தேதி முதல் துணை கலந்தாய்வு தொடங்கி நடைபெற இருக்கிறது.
Related Tags :
Next Story