படுக்கையில் ‘சார்ஜ்’ போட்டு தூங்கியபோது செல்போன் வெடித்து கல்லூரி மாணவர் பலி


படுக்கையில் ‘சார்ஜ்’ போட்டு தூங்கியபோது செல்போன் வெடித்து கல்லூரி மாணவர் பலி
x
தினத்தந்தி 17 Oct 2021 8:05 PM GMT (Updated: 2021-10-18T01:35:46+05:30)

படுக்கையில் ‘சார்ஜ்’ போட்டு தூங்கியபோது செல்போன் வெடித்து கல்லூரி மாணவர் பலி.

கோவை,

கோவையை அடுத்த மதுக்கரை அருகே உள்ள காந்தி நகரை சேர்ந்தவர் சிவராம் (18). கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த 10-ந் தேதி இரவில் தனது செல்போனுக்கு ‘சார்ஜ்’ போட்டபடி அதை உபயோகித்து உள்ளதாக தெரிகிறது.

பின்னர் அவர்தான் படுத்து இருந்த கட்டிலில் செல்போனை வைத்து சார்ஜ் போட்டபடியே தூங்கி விட்டார். இந்தநிலையில் நள்ளிரவு 1 மணியளவில் சிவராம் படுத்து இருந்த அறையில் இருந்து பயங்கர சத்தம் கேட்டது.

அப்போது செல்போன் வெடித்து சிதறியதுடன், அதனால் ஏற்பட்ட தீ, சிவராம் படுத்து இருந்த கட்டிலில் உள்ள மெத்தையில் பிடித்து மளமளவென எரிந்து கொண்டு இருந்தது.

இதில் படுகாயம் அடைந்த சிவராமை, கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருந்தபோதிலும் சிகிச்சை பலனின்றி சிவராம் நேற்று உயிரிழந்தார்.

Next Story