கன்னியாகுமரி: வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை - கலெக்டர் அறிவிப்பு


கன்னியாகுமரி: வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை - கலெக்டர் அறிவிப்பு
x
தினத்தந்தி 18 Oct 2021 2:23 AM GMT (Updated: 2021-10-18T07:53:15+05:30)

கன்னியாகுமரியில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என கலெக்டர் அரவிந்த் அறிவித்துள்ளார்.

நாகர்கோவில்,

குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

குமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் தீயணைப்பு படையினர் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் மாவட்டத்தில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் உள்ள பள்ளிகள் அனைத்திற்கும் இன்று (திங்கட்கிழமை) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் பாதுகாப்பாக தங்களது வீட்டில் இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story