தமிழகத்தில் 1,200க்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு


தமிழகத்தில் 1,200க்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 18 Oct 2021 2:22 PM GMT (Updated: 2021-10-18T19:52:46+05:30)

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,192 பேருக்கு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.


சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சமீப காலங்களாக குறைந்து வருகிறது.  இதேபோன்று, கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன.  பொதுமக்களும் ஆர்வமுடன் தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழக சுகாதார துறை இன்று வெளியிட்டு உள்ள செய்தியில், தமிழகத்தில் 1,192 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளது.

இந்த எண்ணிக்கை நேற்று 1,218, நேற்று முன்தினம் 1,233, அதற்கு முந்தின தினம் 1,245 ஆகவும் இருந்தது.  இதனால் கடந்த சில நாட்களில் ஒப்பிடும்போது இன்று பாதிப்பு 1,200க்கு கீழ் குறைந்துள்ளது.  மொத்தம் 1,26,786 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 9 பேர், தனியார் மருத்துவமனையில் 4 பேர் என 13 பேர் பலியாகி உள்ளனர்.  இதனால் மொத்த பலி எண்ணிக்கை 35,912 ஆக (நேற்று 35,899) ஆக உயர்வடைந்து உள்ளது.

கொரோனா சிகிச்சையில் 14,570 பேர் உள்ளனர்.  ஒரே நாளில் 1,423 பேர் குணமடைந்துள்ளனர்.  இதனால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 26 லட்சத்து 37 ஆயிரத்து 802 ஆக உயர்ந்து உள்ளது.
Next Story