புதுவையில் கொரோனா பாதிப்பு குறைகிறது


புதுவையில்   கொரோனா பாதிப்பு குறைகிறது
x
தினத்தந்தி 18 Oct 2021 2:35 PM GMT (Updated: 2021-10-18T20:05:41+05:30)

புதுவையில் காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 3 ஆயிரத்து 846 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் 28 பேருக்கு தொற்று உறுதியானது.

புதுச்சேரி
புதுவையில்   காலை  10 மணியுடன்  நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 3 ஆயிரத்து 846 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் 28 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 424 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது ஆஸ்பத்திரிகளில் 105 பேர், வீடுகளில் 418 பேர் என 523 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 90 பேர் குணமடைந்தனர். உயிரிழப்பு ஏதும் இல்லை.
புதுவையில் தொற்று பரவல் 0.73 சதவீதமாகவும், குணமடைவது 98.14 சதவீதமாகவும் உள்ளது. நேற்று முன்தினம் முதல் தவணை தடுப்பூசியை 354 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 1,132 பேரும் போட்டுக்கொண்டனர். இதுவரை 10 லட்சத்து 76 ஆயிரத்து 582 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Next Story