முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆஜராக லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் சம்மன்


முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆஜராக லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் சம்மன்
x
தினத்தந்தி 19 Oct 2021 1:20 PM GMT (Updated: 19 Oct 2021 1:20 PM GMT)

கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி இருந்த நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

சென்னை,

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. வரும் 25-ஆம் தேதி சென்னை கிண்டியில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை தலைமை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டது. 

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்து லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்பட்ட நிலையில், சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த  செப்டம்பர்30-ம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. 

அப்போது  உள்ளாட்சி தேர்தல் பணிகள் முடியும் வரை நேரில் ஆஜராக முடியாது என எம்.ஆர் விஜயபாஸ்கர் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கடிதம் எழுதியிருந்தது நினைவுகூரத்தக்கது. 


Next Story