மதிமுகவில் துரை வைகோவுக்கு தலைமைக்கழக செயலாளர் பொறுப்பு- வைகோ அறிவிப்பு

"மதிமுகவில் துரை வைகோவுக்கு பதவி வழங்கப்பட்டது வாரிசு அரசியல் இல்லை" என்று வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னை,
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மகன் துரை வையாபுரி என்ற துரை வைகோவுக்கு அக்கட்சியில் பதவி வழங்குவது தொடர்பாக ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த நிலையில், துரை வையாபுரிக்கு கட்சியில் பதவி வழங்கப்படுவதாக வைகோ அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக வைகோ கூறுகையில், “ மதிமுகவில் துரை வைகோவுக்கு தலைமைக்கழக செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் வாக்கெடுப்பு நடத்தி துரை வைகோவுக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது. பதிவான 106 வாக்குகளில் துரை வைகோவுக்கு ஆதரவாக 104 வாக்குகள் பதிவானது.
மதிமுகவில் துரை வைகோவுக்கு பதவி வழங்கப்பட்டது வாரிசு அரசியல் இல்லை. தொண்டர்கள் விருப்பப்படியே துரை வைகோவுக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது. கட்சியின் பொதுச்செயலாளரை பொதுக்குழு தான் தேர்வு செய்யும்” என்றார்.
Related Tags :
Next Story