மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதல்: கணவர் கண் எதிரே மனைவி பலி

மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் கணவர் கண் எதிரேயே மனைவி பரிதாபமாக இறந்தார்.
செங்குன்றம்,
சென்னையை அடுத்த புழல் காவாங்கரை லால் பகதூர் சாஸ்திரி தெருவைச் சேர்ந்தவர் ரத்தின பாண்டியன். இவருடைய மனைவி வளர்மதி (வயது 46). இவர் அதே பகுதியில் காய்கறி கடை நடத்தி வந்தார்.
நேற்று காலை கணவன்-மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் காய்கறி வாங்க கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். புழல் காவாங்கரை முத்துமாரியம்மன் கோவில் அருகே ஜி.எஸ்.டி. சாலையில் சென்றபோது இவர்களுக்கு பின்னால் வந்த டிப்பர் லாரி, இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
கணவர் கண் எதிரே பலி
இதில் பலத்த காயமடைந்த வளர்மதி, அதே இடத்தில் கணவர் கண் எதிரேயே பரிதாபமாக இறந்தார். லேசான காயங்களுடன் ரத்தின பாண்டியன் உயிர் தப்பினார்.
இதுபற்றி தகவல் அறிந்துவந்த மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பலியான வளர்மதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து டிப்பர் லாரி டிரைவரான பொன்னேரியைச் சேர்ந்த சுரேஷ் (47) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story