வெடிகுண்டுகள், வீச்சரிவாளுடன் 2 ரவுடிகள் கைது


வெடிகுண்டுகள், வீச்சரிவாளுடன்  2 ரவுடிகள் கைது
x
தினத்தந்தி 23 Oct 2021 1:56 PM GMT (Updated: 2021-10-23T19:26:04+05:30)

அரியாங்குப்பத்தில் வெடிகுண்டுகள், வீச்சரிவாளுடன் வந்த 2 ரவுடிகளை போலீசார் துரத்திச் சென்று மடக்கிப்பிடித்தனர்.

அரியாங்குப்பம்
அரியாங்குப்பத்தில் வெடிகுண்டுகள், வீச்சரிவாளுடன் வந்த 2 ரவுடிகளை போலீசார் துரத்திச் சென்று மடக்கிப்பிடித்தனர்.

மடக்கிப்பிடித்தனர்

அரியாங்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் போலீசார் நேற்று  இரவு அரியாங்குப்பம் பழைய பாலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர்.
போலீசாரை கண்டதும் 3 பேரும் மோட்டார் சைக்கிளை கீழே போட்டு விட்டு ஓட்டம் பிடித்தனர். சந்தேகமடைந்த போலீசார், துரத்திச் சென்று 2 பேரை மடக்கிப்பிடித்தனர். ஒருவர் தப்பியோடி விட்டார். மோட்டார் சைக்கிளை சோதனை செய்தபோது அதில் 2 நாட்டு வெடிகுண்டுகள், 2 வீச்சரிவாள்கள்    இருப்பது  தெரிய வந்தது.  விசாரணையில் அவர்கள், அரியாங்குப்பம் பழைய பூராணாங்குப்பம் வீதியை சேர்ந்த அஜித் என்ற லோகநாதன் (வயது 23), உருளையன்பேட்டை பெரியார் நகரை   சேர்ந்த ரிஷி  என்ற ரிஷிகுமார் (20) என்பதும்,  ரவுடி களான இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

வெடிகுண்டுகள் பறிமுதல்

முன் விரோதம் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பூரணாங்குப்பம் வீதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் குணாவை (25) கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 நாட்டு வெடிகுண்டுகள், வீச்சரிவாள்கள், 2 செல்போன்கள், ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பியோடியவரையும் வலைவீசி தேடி வருகிறார்கள். யாரையேனும்   கொலை செய்வதற்காக வெடிகுண்டுகள், வீச்சரிவாள்களுடன் ரவுடிகள் சென்றார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

Next Story