பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம்: கைதான அரசு டாக்டருக்கு ஜாமீன் மறுப்பு
பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம்: கைதான அரசு டாக்டருக்கு ஜாமீன் மறுப்பு சென்னை கோர்ட்டு உத்தரவு.
சென்னை,
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றிவந்தவர் வெற்றிச்செல்வன் (வயது 35). கொரோனா சிகிச்சை பணியில் ஈடுபட்ட டாக்டர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அரசு செலவில் தங்கவைக்கப்பட்டனர். டாக்டர் வெற்றிச்செல்வனும் அந்த நட்சத்திர ஓட்டலில் தங்கவைக்கப்பட்டிருந்தார். கொரோனா சிகிச்சை பணியில் இருந்த பெண் டாக்டர் ஒருவரும் அந்த ஓட்டலில் உள்ள ஒரு அறையில் தங்கியிருந்தார். அப்போது டாக்டர் வெற்றிச்செல்வன், பெண் டாக்டரின் அறைக்குள் புகுந்து பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்த புகாரின் பேரில் தேனாம்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து கடந்த மாதம் 18-ந் தேதி அவரை கைது செய்தனர். இந்தநிலையில் அவர் ஜாமீன் கோரி சென்னை செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
விசாரணைக்குப் பின்பு, டாக்டர் வெற்றிச்செல்வனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி செல்வக்குமார் உத்தரவிட்டார்.

Related Tags :
Next Story