சர்வதேச பலூன் திருவிழா - அடுத்த ஆண்டு தமிழகத்தில் நடைபெறுகிறது..!


சர்வதேச பலூன் திருவிழா - அடுத்த ஆண்டு தமிழகத்தில் நடைபெறுகிறது..!
x
தினத்தந்தி 1 Dec 2021 9:07 PM IST (Updated: 1 Dec 2021 9:07 PM IST)
t-max-icont-min-icon

சர்வதேச பலூன் திருவிழா அடுத்த ஆண்டு தமிழகத்தில் நடத்த திட்டமிட்டுள்ளதாக சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.

சென்னை,

சர்வதேச பலூன் திருவிழா, மெக்சிகோ நாட்டின் லியோன் நகரில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான பலூன் திருவிழா, மெக்சிகோவின் குவானா மாகாணத்தில் நடைபெற்றது. 

ஒன்பது நாட்கள் நடைபெற்ற இந்த திருவிழாவில், 200க்கும் மேற்பட்ட பலூன்கள் பறக்க விடப்பட்டன. இந்த நிலையில் அடுத்த ஆண்டுக்கான சர்வதேச பலூன் திருவிழா தமிழகத்தில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பலூன் திருவிழாவை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும், இது குறித்து ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சுற்றுலாத்துறை சார்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story