இலங்கை அரசால், தமிழக மீனவர் உடல் அவமதிப்பு: சீமான் கண்டனம்


இலங்கை அரசால், தமிழக மீனவர் உடல் அவமதிப்பு: சீமான் கண்டனம்
x
தினத்தந்தி 2 Dec 2021 12:51 AM IST (Updated: 2 Dec 2021 12:51 AM IST)
t-max-icont-min-icon

இலங்கை அரசால், தமிழக மீனவர் உடல் அவமதிப்பு: சீமான் கண்டனம்.

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இலங்கைக் கடற்படையினரால் கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர் ராஜ்கிரணின் உடலை அந்நாட்டு அரசு உடற்கூறாய்வு செய்த பின், வெறுமனவே உடலைப் பொட்டலம் கட்டி, ஆடைகளின்றி அனுப்பி அவமதித்து இருப்பது ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது. தமிழக மீனவரின் இறந்த உடல் மீதும் இனவெறியைக் காட்டும் சிங்கள அரசப் பயங்கரவாதத்தின் இக்கோரச் செயல் வன்மையானக் கண்டனத்திற்கு உரியது.

இது தமிழர்கள் மீதான தீரான வன்மத்தையும், கொடும் இனவெறியையுமே காட்டுகிறது. இதுதொடர்பாக, இலங்கை அரசின் இந்தியத் தூதரகத்தையும், இந்திய வெளியுறவுத் துறையையும் கேள்விக்குள்ளாக்கி, அவற்றைச் சார்ந்தவர்களை நேரில் விளக்கமளிக்க சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டும்கூட மத்திய பா.ஜ.க. அரசும், தமிழகத்தை ஆளும் அரசும் இதுவரை வாய்திறக்காது அமைதி காப்பது வெட்கக் கேடானது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story