வெள்ள இடர் தணிப்பு மற்றும் மேலாண்மைக் குழுவை விரிவுபடுத்தி அரசாணை வெளியீடு

வெள்ள இடர் தணிப்பு மற்றும் மேலாண்மைக் குழுவை விரிவுபடுத்தி அரசாணை வெளியீடு
x
தினத்தந்தி 3 Dec 2021 3:13 PM IST (Updated: 3 Dec 2021 3:13 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் பெருநகர வெள்ள இடர் தணிப்பு மற்றும் மேலாண்மைக்குழுவை விரிவுபடுத்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னை, 

சென்னையில் பெருநகர வெள்ள இடர் தணிப்பு மற்றும் மேலாண்மைக்குழுவை விரிவுபடுத்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

சென்னையில் மழைநீர் தேங்காமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து அரசுக்கு ஆலோசனை வழங்க, ஓய்வுபெற்ற ஐ ஏ எஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் குழு அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அந்த குழுவில் கூடுதல் உறுப்பினர்களை சேர்த்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

இந்த குழுவில், டெல்லி நகர் மற்றும் ஊரமைப்பு நிறுவன தலைமை திட்ட அலுவலர், காலநிலை பின்னடைவு பயிற்சி உலக வள நிறுவன இயக்குநர் நம்பி அப்பாதுரை, சென்னை வளர்ச்சி கல்வி நிறுவனப் பேராசிரியர் ஜானகிராமன், மும்பை ஐஐடிகட்டுமானப் பொறியியல் துறை பேராசிரியர் கபில் குப்தா உள்ளிட்ட பல வல்லுநர்கள் இடம்பெற்றிருந்தனர். 

12 பேர் குழுவில் இடம் பெற்றிருந்த நிலையில் தற்போது கூடுதலாக 6 பேர் இணைக்கப்பட்டதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

Next Story