புதுச்சேரியில் வரும் 6 ஆம் தேதி முதல் 1 - 8-ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு
புதுச்சேரியில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 6ம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.
புதுவை,
புதுச்சேரியில் வரும் 6-ஆம் தேதி முதல் 1 - 8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். மாணவர்களுக்கு ஒருநாள் விட்டு ஒருநாள் வகுப்புகள் நடைபெறும் எனவும் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக புதுச்சேரியில் நவம்பர் 8-ஆம் தேதி முதல், ஒன்றாம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக பள்ளிகள் திறப்பு திடீரென ஒத்திவைக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.
Related Tags :
Next Story