கொரோனா பொது முடக்கத்துக்கு பிறகு இந்தியாவில் 1½ லட்சம் பேர் தற்கொலை கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு
கொரோனா பொது முடக்கத்துக்கு பிறகு இந்தியாவில் 1½ லட்சம் பேர் தற்கொலை கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு.
சென்னை,
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
2020-ம் ஆண்டு கொரோனா பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட பிறகு, இந்தியாவில் மட்டும் 1 லட்சத்து 53 ஆயிரம் பேர் தற்கொலை செய்துள்ளனர். கடந்த 53 ஆண்டுகளில் நடந்த அதிகபட்ச தற்கொலைகள் இது தான்.நாடு முழுவதும் 2020-ம் ஆண்டு மட்டும் 22 ஆயிரத்து 374 குடும்பத்தலைவிகள் தற்கொலை செய்துள்ளனர். 37 ஆயிரத்து 666 தினக்கூலி தொழிலாளர்கள் தற்கொலை செய்துள்ளனர். 12,500 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். 10 ஆயிரத்து 677 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
ஆனால், கொரோனா பொது முடக்க காலங்களில் பிரதமர் மோடியின் நெருங்கிய பெரும் தொழில் அதிபர்களின் சொத்து மதிப்பு மட்டும் பன்மடங்கு உயர்ந்தது. வேலையிழப்பு, வருவாய் இழப்பு, கற்றல் முறை, தேர்வு முறை, பொருளாதார சூழல் காரணமான மன அழுத்தத்தால் 1 லட்சத்து 53 ஆயிரம் உயிர்களை பலி கொடுத்து விட்டு, சில தொழில் அதிபர்களை வாழ வைக்கும் அரசை என்ன சொல்லி அழைப்பது ?
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story