அணை பாதுகாப்பு மசோதா 40 ஆண்டுகள் எதிர்பார்க்கப்பட்ட சட்டம் நிறைவேறி உள்ளது பா.ஜ.க. அறிக்கை
அணை பாதுகாப்பு மசோதா 40 ஆண்டுகள் எதிர்பார்க்கப்பட்ட சட்டம் நிறைவேறி உள்ளது பா.ஜ.க. அறிக்கை.
சென்னை,
தமிழக பா.ஜ.க. நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அணை பாதுகாப்பு மசோதா இரு அவைகளிலும் நிறைவேறி உள்ளதையடுத்து 40 ஆண்டுகளுக்கும் மேலாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு சட்டம் நிறைவேறி உள்ளது. தி.மு.க. அங்கம் வகித்த காங்கிரஸ் அரசு இந்த மசோதாவை கொண்டு வந்த போது அந்தந்த மாநிலங்களில் உள்ள அணைகளுக்கு அந்த மாநில அரசுகளே பொறுப்பு என்று குறிப்பிட்டிருந்த நிலையில், பா.ஜ.க. அரசு அணைகளுக்கு சொந்தமான மாநிலங்களே பொறுப்பு என்று இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அதாவது முந்தைய காங்கிரஸ் அரசு கொண்டு வந்த மசோதா சட்டமாகி இருந்தால், முல்லைப் பெரியாறு அணையை கேரள அரசு கட்டுப்பாட்டில் எடுத்திருக்கும். ஆனால் பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள சட்டப்படி தமிழகத்தின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும்.
நம் அணைகளை நம் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு பல்வேறு திட்டங்களை, சட்டங்களை, விதிகளை, கொள்கைகளை உருவாக்கி அமல்படுத்துவதன் மூலம் அணைகளின் பாதுகாப்பை உறுதி செய்து பேரிடர் காலங்களில் மக்களின் உயிர் காக்கும் முக்கிய சட்டத்தை வரவேற்று ஆதரவளிப்பதை விடுத்து எதிர்ப்பது மக்கள் விரோத செயல் ஆகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story