மாநில செய்திகள்

நெல்லையில் விபத்து; மருத்துவக்கல்லூரி மாணவிகள் உள்பட 3 பேர் பலி + "||" + Accident in Nellai 3 killed, including medical college students

நெல்லையில் விபத்து; மருத்துவக்கல்லூரி மாணவிகள் உள்பட 3 பேர் பலி

நெல்லையில் விபத்து; மருத்துவக்கல்லூரி மாணவிகள் உள்பட 3 பேர் பலி
நெல்லையில் கார் டயர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் மருத்துவக்கல்லூரி மாணவிகள் உள்பட 3 பேர் பலியானார்கள்.
திருநெல்வேலி

திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் 4ஆம் ஆண்டு படிக்கும் மாணவிகள் 3 பேர் திருநெல்வேலியில் இருந்து மொபட்டில் ரெட்டியார்பட்டி நான்குவழிச் சாலையில் சென்றுகொண்டிருந்தனர்.  இவர்கள் ரெட்டியார்பட்டி மலை பகுதி அருகே சென்றுகொண்டிருந்தபோது, எதிரே நாகர்கோவிலில் இருந்து தூத்துக்குடி சென்றுகொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த தடுப்பை உடைத்துக்கொண்டு மொபட்டில் சென்ற மாணவிகள் மீது மோதியது. 

இதில், மொபட்டில் பயணம் செய்த தென்காசி மாவட்டம் ஆவுடையானூரைச் சேர்ந்த திவ்ய காயத்ரி (21), மதுரை பரசுராம்பேட்டை பகுதியைச் சேர்ந்த பிரிடா ஏஞ்சலின் ராணி ஆகிய இரு மாணவிகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒரு மாணவி மற்றும் காரில் பயணம் செய்த 3 பேர் என மொத்தம் 4 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் 4 பேரையும் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, காரில் பயணம் செய்த சண்முகசுந்தரம் உயிரிழந்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


தொடர்புடைய செய்திகள்

1. பொம்மை குடோனில் பயங்கர தீ விபத்து தீயணைப்பு வீரர்கள் 8 மணி நேரம் போராடி அணைத்தனர்
செங்குன்றம் அருகே பொம்மை குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சுமார் 8 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
2. மருத்துவ கல்லூரி மாணவர்கள் உள்பட நெல்லை, தூத்துக்குடியில் மேலும் 740 பேருக்கு கொேரானா
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மருத்துவ கல்லூரி மாணவர்கள் உள்பட மேலும் 740 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது
3. தென்ஆப்பிரிக்கா: மினி பஸ்கள் மோதி விபத்து - 9 பேர் பலி
தென்ஆப்பிரிக்காவின் கேப் மாகாணத்தில் மினி பஸ்கள் எதிரெதிரே மோதிய விபத்தில் சிக்கி 9 பேர் பலியாகினர்.
4. அரிசி ஏற்றுமதி நிறுவன அலுவலகத்தில் தீ விபத்து
பாரிமுனையில் உள்ள அரிசி ஏற்றுமதி நிறுவன அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. மாடியில் புகை மூட்டத்தில் சிக்கிய 3 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
5. பட்டாசு ஆலையில் வெடி விபத்து; உரிமையாளர் உள்பட 4 பேர் பலி
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில், அந்த ஆலையின் உரிமையாளர் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.