ஒட்டக பால் டீ வேணுமா..! சேலத்தில் சக்கை போடு போடும் விற்பனை...!
சேலத்தில் உள்ள கடை ஒன்றில் ஒட்டகப்பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சேலம்,
சேலம் கோரிமேடு பகுதியில் உள்ள கடை ஒன்றில் ஒட்டகப் பாலில் டீ, காபி தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒட்டகப் பாலில் அதிக சத்துக்கள், எளிதில் ஜீரணமாகும் தன்மை உள்ளதால் இந்த புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளதாக கடைக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
ராஜஸ்தானில் இருந்து ஒட்டக பாலை உடனடியாக குளிரூட்டி, 48 மணி நேரத்தில் சேலம் வந்துவிடும் வகையில் ஏற்பாடு செய்து ஒட்டகப் பாலில் டீ, காபி, மில்க்ஷேக் ஆகியவை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.
ஒட்டகப்பால், மாட்டுப் பாலை விட கெட்டித்தன்மை கொண்டதாகவும், சிறிது உப்பு சுவை கூடுதலாகக் கொண்டாதாகவும் இருப்பதால் ஒட்டகப்பாலுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு காணப்படுவதாக கூறினர். மேலும், குழந்தைகள் விரும்பி குடிப்பதால் விற்பனை அதிகரித்து வருவதாகவும் கூறினர்.
Related Tags :
Next Story