முன்னாள் கவர்னர் ரோசய்யாவின் மறைவிற்கு கமல்ஹாசன் இரங்கல்


முன்னாள் கவர்னர் ரோசய்யாவின் மறைவிற்கு கமல்ஹாசன் இரங்கல்
x
தினத்தந்தி 4 Dec 2021 7:06 PM IST (Updated: 4 Dec 2021 7:06 PM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாட்டின் முன்னாள் கவர்னர் ரோசய்யாவின் மறைவிற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்து உள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு முன்னாள் கவர்னரும், ஆந்திர மாநில முன்னாள் முதல்-மந்திரியுமான ரோசய்யா உடல்நலக்குறைவால் இன்று காலமானார். 

உடல்நிலை பாதிக்கப்பட்டு ஆந்திராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வயது முதிர்வு காரணமாக இன்று உயிரிழந்தார். ரோசய்யாவின் மறைவிற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  

இந்த நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் இரங்கலைத் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து, தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'முன்னாள் ஆந்திர முதல்வரும், முன்னாள் தமிழக ஆளுநரும், பழம்பெரும் அரசியல் தலைவருமான ரோசய்யா அவர்களின் மறைவு வருத்தமளிக்கிறது.  

அன்னாரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.

Next Story