டிக்கெட் கேட்ட கண்டக்டரை தாக்கிய போலீஸ்காரர் - பஸ்களை நிறுத்தி டிரைவர்கள் போராட்டம்
செங்கல்பட்டில் டிக்கெட் கேட்ட கண்டக்டரை போலீஸ்காரர் தாக்கியதாக கூறி டிரைவர்கள் ஆஙகாங்கே பஸ்களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை,
செங்கல்பட்டு புதிய பஸ் நிலையத்தில் இருந்து நேற்று காலை 10 மணியளவில் மாமல்லபுரம் செல்ல அரசு பஸ் ஒன்று தயராக இருந்தது. அப்போது மாமல்லபுரம் போலீஸ் நிலையத்தில் 2-ம் நிலை போலீசாக பணிபுரியும் அரிதாஸ் திருக்கழுக்குன்றத்தில் உள்ள போலீஸ் குடியிருப்புக்கு செல்வதற்காக மாமல்லபுரம் செல்லும் அரசு பஸ்சில் பயணம் செய்ய சாதாரண உடையில் பஸ்சில் அமர்ந்திருந்தார்.
அப்போது பஸ் கண்டக்டர் முருகேசன், போலீஸ்காரர் அரிதாசிடம் டிக்கெட் கேட்டார். அப்போது அரிதாஸ் தான் போலீஸ் என்று கூறி டிக்கெட் எடுக்க மறுத்தார். அதற்கு கண்டக்டர் முருகேசன், உங்களது அடையாள அட்டையை காண்பியுங்கள் என்று கூறியுள்ளார்.
தாக்குதல்
போலீஸ்காரர் அரிதாஸ் தனது அடையாள அட்டையை எடுத்து காண்பித்தபோது அதை கண்டக்டர் முருகேசன் தனது செல்போனில் படம் பிடித்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் கோபம் அடைந்த போலீஸ்காரர் அரிதாஸ் கண்டக்டர் முருகேசனை தாக்கியுள்ளார்.
போராட்டம்
இந்த சம்பவம் மற்ற அரசு பஸ் டிரைவர்களுக்கு தெரிய வரவே அவர்கள் ஆங்காங்கே பயணிகளுடன் பஸ்களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஆதர்ஸ் பச்சாரோ, செங்கல்பட்டு பஸ் டெப்போ கிளை மேலாளர் மாறன் ஆகியோர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதன்பேரில் போராட்டத்தை கைவிட்டு மீண்டும் பஸ்களை இயக்க ஆரம்பித்தனர். இந்த சம்பவம் செங்கல்பட்டு புதிய பஸ் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அரசு பஸ் போக்குவரத்து தடைபட்டது.
இதுகுறித்து செங்கல்பட்டு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story