மெட்ரோ ரெயில் சேவை: கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி வழித்தடத்தில் தண்டவாளம் அமைக்கும் பணி
கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் பாதைகள் அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது என்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறினார்கள்.
சென்னை,
சென்னையில் 2-வது கட்டமாக ரூ.61 ஆயிரத்து 843 கோடி செலவில், 118.9 கி.மீ. தூரத்திற்கு 3 வழிப்பாதைகளில் மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக 3-வது வழித்தடம் மாதவரம்-சிறுசேரி சிப்காட் 45.8 கி.மீ., 4-வது வழித்தடம் கலங்கரை விளக்கம்- பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 26.1 கி.மீ., 5-வது வழித்தடம் மாதவரம்-சோழிங்கநல்லூர் வரை 47 கி.மீ. தூரத்திற்கு அமைக்கப்படுகிறது.
இதில் 4-வது வழித்தடமான மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கத்தில் இருந்து பூந்தமல்லி வரை 26.1 கி.மீ. தூரத்திற்கான பாதையில் 2025-ம் ஆண்டு ரெயில்களை ஓட்டுவதற்காக சிறப்பு முன்னுரிமை அளிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இந்தப்பாதையில் 18 உயர்த்தப்பட்ட ரெயில் நிலையங்களும், 12 சுரங்கப்பாதையில் ரெயில் நிலையங்களும் அமைக்கப்படுகிறது.
மயிலாப்பூர், தியாகராயநகர், நந்தனம் மற்றும் வடபழனி போன்ற நகரின் முக்கிய பகுதிகளை இணைப்பதுடன், மாநகரின் மேற்கு பகுதியில் உள்ள புறநகர் பகுதிகளான போரூர் மற்றும் பூந்தமல்லி போன்ற பொதுப்போக்குவரத்து குறைவாக உள்ள பகுதிகளையும் இணைக்கிறது.
தண்டவாளம் அமைக்க ஒப்பந்தப்புள்ளி
இதற்கான பூர்வாங்க பணிகள் முழுவீச்சில் நிறைவடைந்த நிலையில், அடித்தள தூண்கள் அமைக்கும் பணி ஏற்கனவே தொடங்கி உள்ளது. ரெயில் தண்டவாளம் அமைக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு இருந்தது. இதில் இந்திய ரெயில்வேயின் கீழ் இயங்கும் இர்கான் இன்டர்நேஷனல் நிறுவனம் 26 கி.மீ. தூரத்திற்கு ரெயில் பாதைகளை அமைப்பதற்கான ஒப்பந்தபுள்ளியில் மிக குறைந்த ஏல தொகையை பதிவு செய்திருப்பது தெரியவந்து உள்ளது.
இந்தப்பாதையில் சுரங்கத்தில் அமைக்கப்படும் ரெயில் நிலையங்களுக்கான கட்டுமானப்பணிகள் நிறைவடைந்தவுடன், சுரங்கம் தோண்டுவதற்கான பணிகளை அடுத்த ஆண்டு (2022) அக்டோபர் மாதம் தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது. பணிகள் தொடர்பாக நடந்து வரும் ஆய்வு கூட்டங்களிலும், குறித்த காலக்கெடுவுக்குள் பணிகளை முடிக்க வலியுறுத்தப்பட்டு வருகிறது.
சவாலான பணி
கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி வழித்தடத்தில் பாதை அமைப்பதற்கான பணிகள் சவாலானதாகும்.
குறிப்பாக மயிலாப்பூர், தியாகராய நகர், நந்தனம் மற்றும் வடபழனி போன்ற பரபரப்பான சில முக்கிய மாநகர பகுதிகள் வழியாக மெட்ரோ ரெயில் வழித்தடத்தை அமைப்பது மட்டுமல்லாமல், நந்தனம் போன்ற இடங்களில் கடினமான மண் நிலைமைகளின் சவாலை என்ஜினீயர்கள் எதிர்கொள்ள வேண்டி வரலாம்.
இனிமையான பயணம்
இந்தப்பாதை பணிகள் முடிவடைந்தவுடன் கலங்கரை விளக்கத்தில் இருந்து பூந்தமல்லிக்கு பயணம் செய்ய சுமார் ஒரு மணி நேரம் வரை ஆகலாம்.
ஆனால் பயணம் இனிமையாக இருக்கும். காரணம் மெரினா கடற்கரை, மயிலாப்பூர், போட் கிளப், நந்தனம், தியாகராயநகர், வடபழனி, சாலிகிராமம் போன்ற சில மத்திய மாநகர பகுதிகளை கடந்து போரூர் சந்திப்பு, வளசரவாக்கம், சென்னை புறவழிச்சாலை, பூந்தமல்லி பஸ் நிலையம் மற்றும் பூந்தமல்லி புறவழிச்சாலை போன்ற மேற்கு புறநகர் பகுதிகளுடன் இணைக்கும் பகுதிகளையும் பார்வையிட்டவாறு பயணிப்பதால் பயணம் இனிமையாக இருக்கும்.
பவர்ஹவுஸ்-போரூர்
4-வது வழித்தடத்தில் பவர் ஹவுஸ் முதல் போரூர் சந்திப்பு வரை 9 நிலையங்களுடன் 7.9 கிலோ மீட்டர் உயர்த்தப்பட்ட பாதை அமைக்கும் பணியில் தனியார் நிறுவனம் ஈடுபட்டு உள்ளது.
அதேபோல், போரூர் சந்திப்பில் இருந்து 9 ரெயில் நிலையங்களுடன் கூடிய 7.9 கிலோ மீட்டர் உயர்த்தப்பட்ட பாதைக்கான பணியும் நடந்து வருகிறது.
டிரைவர் இல்லாத ரெயில்
பாரதிதாசன் சாலையிலிருந்து கலங்கரை விளக்கம் வரையிலான 5 ரெயில் நிலையங்களை கொண்ட 5.15 கிலோ மீட்டர் தூரம் சுரங்கப்பகுதியில் பணி செய்வதற்காக தனியார் நிறுவனம் குறைந்த ஏலத்தொகையை குறிப்பிட்டு உள்ளது. அதேபோல், பவர் ஹவுஸ் வளைவில் இருந்து போர்ட் கிளப் வரை 5 ரெயில் நிலையங்களுடன் 4.8 கி.மீ. தூரத்திலான நிலத்தடி பகுதியில் பணி செய்ய மற்றொரு நிறுவனம் குறைந்த தொகையை பதிவு செய்துள்ளது.
அத்துடன் முதல் முறையாக 78 ரெயில் பெட்டிகள் கொண்ட டிரைவர் இல்லாத ரெயில்கள் வினியோகம் செய்ய 3 நிறுவனங்கள் ஏலம் எடுத்துள்ளன. இந்த ரெயில்கள் முழுவதும் கட்டுப்பாட்டு அறையுடன் உள்ள தொடர்புகள் மூலம் இயக்கப்படும்.
மேற்கண்ட தகவல்களை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறினார்கள்.

Related Tags :
Next Story