அண்ணா பல்கலைக்கழகத்தில் 763 மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை அமைச்சர் தகவல்
அண்ணா பல்கலைக்கழகத்தில் 763 மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருவதாகவும், அவர்களுக்கு ஒன்று கூடி உணவருந்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை,
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 9 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அங்கு படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் கொரோனாத் தொற்று பரிசோதனை நேற்று மேற்கொள்ளப்பட்டது. இதனை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், தெற்கு வட்டார துணை கமிஷனர் சிம்ரன் ஜீத் சிங் காஹ்லோன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
763 பேருக்கு பரிசோதனை
அண்ணா பல்கலைக்கழகத்தில் ‘ஏ.சி. டெக்’ வளாகத்தில் ஒரு மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த வளாகத்தில் உள்ள 300 மாணவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 9 மாணவர்களுக்கு எ-வகையான அறிகுறியுடன் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த 9 பேரும் கிண்டி கொரோனா கிங் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து எடுக்கப்பட்ட 8 சளி மாதிரிகள் மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், இந்த வளாகத்தில் உள்ள 763 மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
அதிகாரிகள் கண்காணிப்பு
அதேபோல் சாப்பிடும் போது கூட்டமாக அமர்ந்து உணவு உண்ணாமல், தகுந்த சமூக இடைவெளியுடன் சாப்பிடுவதற்கு மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு இன்று (நேற்று) காலை 8 மணி நிலவரப்படி 13 ஆபத்தான நாடுகளில் இருந்து விமானம் மூலம் 9 ஆயிரத்து 12 பேர் வந்துள்ளனர்.
அவர்கள் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொண்டதில் 11 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 9 ஆயிரத்து 1 பயணிகளும் அவரவர் வீடுகளில் ஒரு வாரத்திற்கு தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்திக்கொண்டிருக்கிறார்களா? என்பதை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
13 ஆபத்தான நாடுகள்
அதேபோல் தொற்று பாதிப்பு ஏற்பட குறைந்த ஆபத்து நிறைந்த நாடுகளில் இருந்து 33 ஆயிரத்து 112 பேர் வந்துள்ளனர். இவர்களில் 2 சதவிதம் பேர் என 1,025 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் 2 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் மொத்தம் 13 பேருக்கு தொற்று என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த 13 பேரில் ஒருவருக்கு எந்த அறிகுறியும் இல்லாமல், வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். மீதமுள்ள 12 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த 12 பேரில் முதற்கட்ட பரிசோதனையில் யாருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு இல்லை.
தான்சானியா, கானா போன்ற நாடுகளில் இருந்து வருபர்களுக்கும் இனி விமான நிலையங்களில் கட்டாயம் பரிசோதனை மேற்கொள்ளப்படும். எனவே அதிக பாதிபுள்ள நாடுகள் எண்ணிக்கை தற்போது 13 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
வாட்ஸ்-அப் வதந்திகளை நம்ப வேண்டாம்
இதையடுத்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறும்போது, ‘கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து பன்னாட்டு விமான நிலையங்கள் உட்பட தொற்று பாதிப்பு ஏற்பட்ட அனைத்து இடங்களிலும் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொண்டு வருகிறோம். தேவையான அனைத்து இடங்களிலும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மேற்கொண்டு வருகிறது.
செல்போன் எண்ணை தவறுதலாக கொடுப்பதாலும், மற்றொருவர் தொலைப்பேசி எண்ணை அளித்து வேறொருவர் தடுப்பூசி செலுத்தி கொள்வதால், குறிப்பிட்ட நபருக்கு சான்றிதழ் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. வாட்ஸ்-அப் வதந்திகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம். சென்னை மாநகராட்சி மேற்கொண்ட ஆய்வில் சென்னையில் 14 முதல் 21 சதவீதம் பேர் மட்டுமே முககவசம் அணிகின்றனர். வெளியிடங்களில் 32 சதவீதம் பேர் மட்டுமே முககவசம் அணிகின்றனர், ’ என்றார்.

Related Tags :
Next Story