‘அடிப்படை ஜனநாயக உரிமைகளை நிலைநாட்ட உறுதி ஏற்போம்' உலக மனித உரிமைகள் நாளையொட்டி மு.க.ஸ்டாலின் சூளுரை
‘அடிப்படை ஜனநாயக உரிமைகளை நிலைநாட்ட உறுதி ஏற்போம்' உலக மனித உரிமைகள் நாளையொட்டி மு.க.ஸ்டாலின் சூளுரை.
சென்னை,
உலக மனித உரிமை நாளையொட்டி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:-
சாதி, மதம், இனம், நிறம், பாலினம் மற்றும் பிறப்பு அடிப்படையிலான எந்தவித பாகுபாடுமின்றி அனைத்து மக்களுக்குமான அடிப்படை உரிமைகளும் அடிப்படை தேவைகளும் நிறைவேற்றப்படவேண்டும் என்பதே மனித உரிமை தத்துவமாகும். 1948-ம் ஆண்டு மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தை ஐக்கிய நாடுகளின் பொது அவை ஏற்றுக்கொண்டதை நினைவுகூர்ந்திடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10-ந்தேதியன்று உலக மனித உரிமைகள் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
நம்மிடம் மற்றவர்கள் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என நினைக்கிறோமோ, அதுபோல நாம் மற்றவர்களிடமும் நடந்து கொள்ளவேண்டும் என்பதே மனித உரிமையின் அடிப்படை தத்துவமாகும். அந்தவகையில் ‘அனைவரும் மனிதர்கள், அனைவரும் சமமானவர்கள்' என்பதை இந்த ஆண்டுக்கான மனித உரிமைகள் நாள் முழக்கமாக ஐ.நா. அவை அறிவித்துள்ளது. இதைத்தான் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்றும் “யாவரும் கேளிர்” என்றும் தமிழ் நிலம் தாங்கி நின்றது.
இதைத்தான் ‘சுயமரியாதை’ எனும் பெயரில் இந்த தமிழ் மண் அரசியல்-சமூக-பண்பாட்டு தளத்தில் தொடர்ந்து வளர்த்து வந்துள்ளது. அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை ஜனநாயக உரிமைகளை நிலைநாட்டிடவும், ஒவ்வொருவரின் சுயமரியாதையையும், பாதுகாத்திடவும் இந்த மனித உரிமைகள் நாளில் உறுதியேற்போம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story