தமிழக காங்கிரசில் புதிதாக 3 மாவட்ட தலைவா்கள் அறிவிப்பு


தமிழக காங்கிரசில் புதிதாக 3 மாவட்ட தலைவா்கள் அறிவிப்பு
x
தினத்தந்தி 12 Dec 2021 5:25 AM IST (Updated: 12 Dec 2021 5:25 AM IST)
t-max-icont-min-icon

தமிழக காங்கிரசில் புதிதாக 3 மாவட்ட தலைவா்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.



சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் 3 மாவட்டங்களுக்கு புதிதாக மாவட்ட தலைவா்களை நியமித்து, அக்கட்சியின் அகில இந்திய பொது செயலாளா் கே.சி. வேணுகோபால் அறிவித்துள்ளாா்.  இந்த உத்தரவுகள் சோனியா காந்தியின் ஒப்புதலுடன் அறிவிக்கப்படுவதாகவும், இவை உடனடியாக செயல்பாட்டுக்கு வருவதாகவும் கூறியுள்ளாா்.

இதுபற்றி அவா் வெளியிட்ட அறிவிப்பில், கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தலைவராக வி.எம். பினுலால் சிங், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தலைவராக கே.டி. உதயம், நாகா்கோயில் நகர மாவட்ட தலைவராக நவீன் குமாா் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனா். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொது செயலாளராக தாரகை கட்பா்ட் நியமிக்கப்படுகிறாா்.


Next Story