இல்லம் தேடி கல்வி திட்டத்தில் தொண்டு உள்ளத்துடன் தன்னார்வலர்கள் பங்கேற்க வேண்டும்


இல்லம் தேடி கல்வி திட்டத்தில் தொண்டு உள்ளத்துடன் தன்னார்வலர்கள் பங்கேற்க வேண்டும்
x
தினத்தந்தி 13 Dec 2021 2:50 AM IST (Updated: 13 Dec 2021 2:50 AM IST)
t-max-icont-min-icon

இல்லம் தேடி கல்வி திட்டத்தில் தொண்டு உள்ளத்துடன் தன்னார்வலர்கள் பங்கேற்க வேண்டும் அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி வலியுறுத்தல்.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த பரங்கிமலை பட்ரோட்டு நசரத்புரம் பகுதியில் இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தை விளக்கும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரோஸ் நிர்மலா தலைமை தாங்கினார். கலை நிகழ்ச்சியை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

குழந்தைகள் பள்ளிக்கு செல்வதை உறுதிசெய்வதின் நோக்கமாக இந்த இல்லம் தேடி கல்வி திட்டம் உள்ளது. குழந்தைகளுக்கு எந்த ஒரு பட்டதாரியாக இருந்தாலும் பாடம் நடத்தலாம் என்ற வகையில் தன்னார்வலர்களை தேடி வருகிறோம். தன்னார்வலர்கள் பலர் இத்திட்டத்தில் சேர பதிவு செய்து உள்ளனர். அவர்களை தேர்ந்தெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. சமுதாயத்துக்காக உங்களை நீங்கள் அர்ப்பணித்து கொள்ள வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள கிராமம் முதல் மாநகர பகுதிகளில் படித்த இளைஞர்கள் யாராக இருந்தாலும் தொண்டு உள்ளத்துடன் இந்த திட்டத்தில் பங்கேற்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட திட்ட உதவி அலுவலர் பிரபாகரன், உடற்கல்வி அலுவலர் செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story