72-வது பிறந்தநாள்: ரஜினிகாந்துக்கு மோடி, மு.க.ஸ்டாலின் வாழ்த்து
72-வது பிறந்தநாளையொட்டி நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சென்னை,
நடிகர் ரஜினிகாந்த் நேற்று தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘ரஜினிகாந்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். சிறந்த நடிப்பாலும், படைப்பாற்றலாலும் மக்களை தொடர்ந்து அவர் ஊக்கப்படுத்த வேண்டும். அவருக்கு நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும் எல்லாம் வல்ல இறைவன் வழங்க வேண்டுகிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரும் ரஜினிக்கு டுவிட்டர் மூலம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின் வாழ்த்து
இதேபோல் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக ரஜினிகாந்தை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் மு.க.ஸ்டாலின் தனது ‘டுவிட்டர்’ பக்கத்திலும் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
உள்ளார்ந்த அன்புடன் பழகிடும் இனிய நண்பர் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள். 72-வது அகவையில் அடியெடுத்து வைக்கும் அவர், இன்னும் பல ஆண்டுகள் தமிழ் மக்களை தன்னிகரற்ற தனது திரையாளுமையால் மகிழ்விக்கவும், நல்ல உடல் நலத்துடன் திகழவும் விழைகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்:- தனது 72-வது வயதில் அடியெடுத்து வைக்கும் இனிய நண்பரும், தமிழ் திரையுலகில் இன்றளவும் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் என்று தமிழக மக்களால் அன்போடு அழைக்கப்படுபவருமான ரஜினிகாந்துக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி:- ரஜினிகாந்த் நீண்ட ஆயுளுடன், ஆரோக்கியமான வாழ்வு வாழ எனது நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
அண்ணாமலை
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை:- பிறந்தநாள் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் சீரும், சிறப்புமாக வாழ நான் இறைவனை வேண்டிக்கொள்கிறேன். பாபாஜியின் கருணையும், அருளும் என்றும் அவருக்கு கிடைக்கட்டும்.
கமல்ஹாசன்
மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன்:- எனது இனிய நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் பல்லாண்டுகள் வாழ்ந்து ரசிகர்களை மகிழ்விக்க மனதார வாழ்த்துகிறேன்.
வைரமுத்து
ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்து கவிஞர் வைரமுத்து டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தொலைபேசியில் வாழ்த்து சொன்னேன். உங்கள் வாழ்வில் இனி அரசியல் பணி இல்லை. ஆனால், அறப்பணி இல்லாமல் இல்லை உடல்நலம் - மனவளம் கலைவளம் - பொருள்வளம் கண்டு அறப்பணி தொடர்க என்றேன். சிரித்தார். அவர் பேருக்குள் மட்டுமா சிரிப்பிலும் இருக்கிறது காந்தம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
குமரி அனந்தன்
இதேபோல் சசிகலா, தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார், அகில இந்திய காந்தி காமராஜ் காங்கிரஸ் கட்சி தலைவர் மணி அரசன் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Related Tags :
Next Story