உர மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் சசிகலா கோரிக்கை


உர மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் சசிகலா கோரிக்கை
x
தினத்தந்தி 14 Dec 2021 3:42 AM IST (Updated: 14 Dec 2021 3:42 AM IST)
t-max-icont-min-icon

உர மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் சசிகலா கோரிக்கை.

சென்னை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என்ற பெயரில் சசிகலா நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் விவசாயிகள் மழை வெள்ளத்தால் தாங்கள் விளைவித்த பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்து, அதனை காப்பாற்ற முடியாமல் சிரமப்பட்டு கொண்டிருக்கிறார்கள். இது போன்று எண்ணற்ற இன்னல்களுக்கு மத்தியில்தான் தாங்கள் விளைநிலங்களில் பயிரிடப்பட்டுள்ள வேளாண் பயிர்களை காப்பாற்ற மிகவும் பாடுபட்டு கொண்டு இருக்கிறார்கள். இந்த இக்கட்டான சூழ்நிலையில் பொட்டாஷ் உரத்தின் விலை உயர்ந்திருப்பதும், கடும் தட்டுப்பாடு நிலவுவதும் விவசாயிகள் தலையில் இடி விழுந்தது போல் உள்ளது.

உர விலையேற்றத்தால் ஏற்படும் கூடுதல் செலவினத்தைக் குறைக்கும்விதமாக உரமானியத்தை மத்திய அரசு உயர்த்தி வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர். அதற்கு மத்திய அரசு முன் வர வேண்டும். அதே போல் தமிழக அரசும், உர தட்டுப்பாடு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story