வீடு வாடகைக்கு எடுத்து சூதாட்டம்; 11 பெண்கள் கைது


வீடு வாடகைக்கு எடுத்து சூதாட்டம்; 11 பெண்கள் கைது
x
தினத்தந்தி 15 Dec 2021 6:19 AM IST (Updated: 15 Dec 2021 6:19 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் வீடு வாடைக்கு எடுத்து சூதாட்டத்தில் ஈடுப்பட்ட 11 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை,

சென்னை சேத்துப்பட்டு, எஸ்.எம்.நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக சேத்துப்பட்டு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையிலான தனிப்படை போலீசார், குறிப்பிட்ட வீட்டில் திடீர் சோதனை நடத்தினார்கள்.

அங்கு 11 பெண்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.18 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து, நீண்ட நாட்களாக இதுபோல் சூதாட்டத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது.

Next Story