பொட்டாஷ் உர விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் மத்திய-மாநில அரசுகளுக்கு விஜயகாந்த் வலியுறுத்தல்
பொட்டாஷ் உர விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் மத்திய-மாநில அரசுகளுக்கு விஜயகாந்த் வலியுறுத்தல்.
சென்னை,
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பொட்டாஷ் உரம் விலை உயர்வால் விவசாயிகளின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது. 50 கிலோ பொட்டாஷ் மூட்டை ஒன்று ரூ.1,040-க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது புதிதாக வந்துள்ள ஒரு மூட்டை பொட்டாஷ் ரூ.1,700-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரே சமயத்தில் மூட்டைக்கு ரூ.660 உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையே விவசாயம் செய்துவரும் நிலையில், பொட்டாஷ் விலை உயர்வால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே மத்திய அரசு மானியத்தொகையை உயர்த்தி வழங்கி, பழைய விலைக்கே பொட்டாஷ் விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். பொட்டாஷ் விலையை குறைக்க மத்திய அரசுக்கு, தமிழக அரசும் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story