வருமான வரித்துறை முதன்மை ஆணையராக கீதா ரவிச்சந்திரன் நியமனம்


வருமான வரித்துறை முதன்மை ஆணையராக கீதா ரவிச்சந்திரன் நியமனம்
x
தினத்தந்தி 16 Dec 2021 1:34 AM IST (Updated: 16 Dec 2021 1:34 AM IST)
t-max-icont-min-icon

வருமான வரித்துறை முதன்மை ஆணையராக கீதா ரவிச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரித்துறை முதன்மை ஆணையராக கீதா ரவிச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். 1987 ஆம் ஆண்டு இந்திய வருவாய் பணியில் சேர்ந்த கீதா ரவிச்சந்திரன் தனது 34 ஆண்டு கால பணியில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். 

சென்னை, மும்பை, நாக்பூர், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவரான கீதா ரவிச்சந்திரனுக்கு கலை, இலக்கியம் மற்றும் இசைத்துறையில் நாட்டம் அதிகம். இந்நிலையில் கீதா ரசிச்சந்திரன் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரித்துறை முதன்மை ஆணையராக நேற்றைய தினம் பொறுப்பெற்றுக் கொண்டார். 

Next Story