பிரசவத்திற்காக சிறுமி அனுமதி; கைது செய்யப்பட்ட கணவர்...


பிரசவத்திற்காக சிறுமி அனுமதி; கைது செய்யப்பட்ட கணவர்...
x
தினத்தந்தி 17 Dec 2021 3:09 PM IST (Updated: 17 Dec 2021 3:09 PM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் 17 வயது சிறுமியை திருமணம் செய்த காதல் கணவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.



சேலம்,

சேலம் ஓமலூர் அருகே உள்ள பாரதிபுரம் பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வன்.  இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து, கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.  இந்நிலையில், அந்த 17 வயது சிறுமி கர்ப்பமடைந்து உள்ளார்.

இதனை தொடர்ந்து, அவர் பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கிருந்த மருத்துவர்கள் சிறுமிக்கு 16 வயதில் திருமணம் நடந்துள்ளது என அறிந்து அதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக தீவட்டிப்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட போலீசார், சிறுமியின் கணவர் தமிழ்செல்வனை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர்.  இதுபற்றி தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


Next Story