கன்னியாகுமரியில் சுற்றுலா தலங்களுக்கு செல்ல 3 நாட்கள் தடை
கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் செல்ல பொதுமக்களுக்கு 3 நாட்கள் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
கன்னியாகுமரி,
தமிழகத்தில் ஒமைக்ரான் வகை உருமாறிய கொரோனா பரவலை முன்னிட்டு தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. நைஜீரியாவில் இருந்து வந்த ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதியான நிலையில், அவருடன் தொடர்பில் இருந்த 7 பேருக்கு எஸ் வகை திரிபு கண்டறியப்பட்டு உள்ளது.
இதனை தொடர்ந்து, அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த நிலையில், கிறிஸ்மஸ் மற்றும் புது வருட பிறப்பு கொண்டாட்டங்கள் அடுத்தடுத்து வர இருக்கின்றன. இதனால், பொதுமக்கள் அதிக அளவில் கூட்டம் கூடாமல் இருக்க வேண்டிய நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரை, நீர்வீழ்ச்சி பூங்காக்கள் உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் செல்ல பொதுமக்களுக்கு 3 நாட்கள் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இதன்படி, வருகிற 31ந்தேதி முதல் ஜனவரி 2ந்தேதி வரை பொதுமக்களுக்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
Related Tags :
Next Story