சென்னை அடையாறில் உள்ள தொல்காப்பியப் பூங்காவில் சீரமைப்பு பணிகள் மு.க.ஸ்டாலின் ஆய்வு
அடையாறில் உள்ள தொல்காப்பியப் பூங்காவில் மேற்கொள்ளப்படும் சீரமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை,
மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதியினால் 2008-ம் ஆண்டு சென்னை அடையாறில் 58 ஏக்கர் பரப்பிலான தொல்காப்பியப் பூங்கா அடிக்கல் நாட்டப்பட்டு, 22.1.2011 அன்று மக்கள் பயன்பாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டது. அதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 17-ந் தேதி (நேற்று) பார்வையிட்டு, அங்கு நடைபெற்று வரும் சீரமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
அதோடு, சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை மற்றும் சார் துறைகளுடன் இணைந்து மேற்கொண்டு வரும் கூவம் மற்றும் அடையாறு நதிகள் சீரமைப்பு பணிகள் மற்றும் சுமார் ரூ.2,773.49 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள பக்கிங்காம் கால்வாய் மற்றும் அதன் பிரதான கால்வாய்கள், கூவம் மற்றும் அடையாறு ஆறுகளின் வடிகால்கள் சீரமைப்பு, எண்ணூர் கழிமுகப் பகுதியின் சுற்றுச்சூழல் சீரமைப்பு ஆகிய பணிகள் குறித்தும் முதல்-அமைச்சர் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.
சீரமைப்புப் பணிகள்
இச்சீரமைப்புப் பணிகள், பொதுப்பணித் துறை, நீர்வள ஆதாரத்துறை, சென்னை மாநகராட்சி, நகராட்சி நிர்வாக இயக்குநரகம், பேரூராட்சிகள் ஆணையரகம், ஊரக வளர்ச்சி இயக்குநரகம், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் ஆகிய துறைகளுடன் இணைந்து மேற்கொள்ளப்படவுள்ளன.
இச்சீரமைப்புப் பணிகளின் ஒரு பகுதியாக, ஆற்றின் கரையோரங்களில் தாவரங்கள் நடவு செய்யும் பணிகள், சென்னை மாநகராட்சியால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகளுக்கான தொழில்நுட்ப ஆலோசனைகளுக்கு, சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை மற்றும் வல்லுனர்களின் கருத்துகள் பெறப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மறுகுடியமர்வு
ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் குடும்பங்கள் கணக்கெடுப்பு செய்யப்பட்டு, அக்குடும்பங்கள் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில் மறுகுடியமர்வு செய்யப்பட்டு அவர்களுக்கான மறுவாழ்வு திட்டப் பணிகள் விரிவாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தற்போது நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகள், திடக்கழிவு அகற்றுதல், பாதுகாப்பு வேலி அமைத்தல், கழிவுநீரை இடைமறித்தல், மாற்று வழிகளை அமைத்தல் போன்ற சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென்று அலுவலர்களுக்கு முதல்-அமைச்சர் உத்தரவிட்டார்.
மேலும், நீர்வள ஆதாரத் துறை மற்றும் சென்னை மாநகராட்சியின் சார்பில் பக்கிங்காம் கால்வாய் மற்றும் அதன் பிரதான கால்வாய்கள், கூவம் மற்றும் அடையாறு ஆறுகளின் வடிகால்கள் ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு பணிகள் குறித்தும் அவர் அலுவலர்களிடம் கேட்டறிந்தார். தொல்காப்பியப் பூங்காவிற்கு அதிக அளவில் மாணவர்கள் வருவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
உடனிருந்தோர்
நீர்வள ஆதாரத் துறையின் சார்பில் எண்ணூர் கழிமுகப் பகுதியில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கான மத்திய கடல்சார் ஒழுங்குமுறை மண்டல ஆணையத்தின் சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் முதல்-அமைச்சர் ஆய்வு செய்தார்.
இந்த நிகழ்வில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை உறுப்பினர் செயலாளர் சீ.ஸ்வர்ணா, சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் சி.விஜயராஜ் குமார், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story