தள்ளுவண்டியில் பிணமாக கிடந்தான் பசி கொடுமையால் 4 வயது சிறுவன் உயிரிழந்த துயரம்
விழுப்புரத்தில் தள்ளுவண்டியில் பிணமாக கிடந்த 4 வயது சிறுவன் பசி கொடுமையால் உயிரிழந்த அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.
விழுப்புரம்,
விழுப்புரம்-சென்னை நெடுஞ்சாலையில் மேல்தெரு பகுதியில் துணிகளை இஸ்திரி செய்யும் தள்ளுவண்டியில் கடந்த 15-ந் தேதியன்று 4 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் மர்மமான முறையில் பிணமாக கிடந்தான்.
அந்த சிறுவன் யார், எந்த ஊரை சேர்ந்தவன் என்பது குறித்து விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உணவு இல்லை
இந்நிலையில் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்த சிறுவனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில் சிறுவன் கொலை செய்யப்படவில்லை என்பதும் உறுதியானது. சிறுவன் இயற்கையாக இறந்திருந்ததும், அதேநேரத்தில் அவனது வயிற்றில் உணவு ஏதும் இல்லாமல் இருந்ததும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.
இதன் மூலம், சிறுவன் உணவு கிடைக்காமல் பட்டினியாக கிடந்து பசி கொடுமையால் உயிரிழந்த அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. எனவே அவனது பெற்றோர், உறவினர்கள் உணவு கொடுக்காமல் அறையில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியதால் அவன் இறந்தானா? என்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனிப்படை போலீசார்
இதுபற்றி தனிப்படை போலீசார் கூறுகையில், இறந்த சிறுவனின் புகைப்படத்தை தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி அவனது பெற்றோரை தேடும் பணி நடந்து வருகிறது. ஆனால் சிறுவனின் பெற்றோர் பற்றிய விவரம் கிடைக்காத சூழலில் ஆந்திரா, கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என கருதப்படுகிறது.
எனவே அம்மாநிலங்களுக்கும் தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களை சேர்ந்தோர் பலர் குடும்பத்தோடு தங்கியிருந்து சாலையோரம் கேபிள் வயர்கள் புதைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களின் பட்டியல் கணக்கெடுக்கப்பட்டு விசாரிக்கும் பணிகளும் நடந்து வருகிறது. இன்னும் 2, 3 நாட்களில் சிறுவன் யார், அவனது பெற்றோர் யார் என்ற முழு விவரமும் சேகரிக்கப்படும் என்றனர்.

Related Tags :
Next Story