ஓ.பி.எஸ். சொன்ன குட்டிக்கதை பாமர மக்களுக்கு பொருந்தும், சசிகலாவிற்கு பொருந்தாது: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
சசிகலா இல்லாமல் அதிமுக நன்றாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. சசிகலாவிற்கு மன்னிப்பே கிடையாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை,
ஓ.பி.எஸ். சொன்ன குட்டிக்கதை பாமர மக்களுக்கு பொருந்தும், சசிகலாவிற்கு பொருந்தாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “சசிகலா இல்லாமல் அதிமுக நன்றாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. சசிகலா அதிமுக கட்சிக் கொடியை பயன்படுத்தக் கூடாது என காவல்துறையில் புகார் அளித்துள்ளோம். ஒருங்கிணைப்பாளர்கள் ஒரு நிலைப்பாட்டோடு தெளிவாக இருக்கிறார்கள். சசிகலாவுக்கும், அதிமுகவுக்கும் சம்பந்தம் இல்லை. சசிகலாவிற்கு மன்னிப்பே கிடையாது. ஓ.பி.எஸ். சொன்ன குட்டிக்கதை பாமர மக்களுக்கு பொருந்தும், சசிகலாவிற்கு பொருந்தாது” என்று அவர் தெரிவித்தார்.
முன்னதாக அதிமுகவின் கிறிஸ்துமஸ் விழாவில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று கலந்து கொண்டனர். அப்போது பேசிய ஓ.பன்னீர்செல்வம் குட்டிக்கதை ஒன்றை சொல்லி “மனம் திருந்தி வருபவர்களை மன்னித்து ஏற்றுக் கொள்வதுதான் தலைமைக்கு அழகு” என பேசினார். ஓ.பன்னீர் செல்வம் மறைமுகமாக சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்து சூசகமாக பேசியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.
Related Tags :
Next Story