நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க தயார் அப்பல்லோ ஆஸ்பத்திரி அறிவிப்பு


நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க தயார் அப்பல்லோ ஆஸ்பத்திரி அறிவிப்பு
x
தினத்தந்தி 21 Dec 2021 7:02 PM GMT (Updated: 21 Dec 2021 7:02 PM GMT)

ஜெயலலிதா மரணம் தொடர்பாக நடைபெறும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க தயார் அப்பல்லோ ஆஸ்பத்திரி அறிவிப்பு.

சென்னை,

ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளதாக அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

எங்களை பொருத்தவரை இந்த விசாரணை ஆணையம் மருத்துவ ரீதியான நிபுணத்துவம் பெறவில்லை என்பதுதான். இதற்காகத்தான் சுப்ரீம் கோர்ட்டு வரை சென்று வழக்கு தொடர்ந்தோம்.

இதுகுறித்து விசாரணை ஆணையம் விசாரித்தபோது, எங்கள் ஆஸ்பத்திரியை சேர்ந்த 56 டாக்டர்கள், 22 மருந்தாளுனர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் இதுவரை ஆஜராகி சாட்சியம் அளித்துள்ளனர். ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து 6 ஆயிரம் பக்கங்களை கொண்ட மருத்துவ அறிக்கைகளை தாக்கல் செய்துள்ளோம். இதுபோன்ற ஆவணங்களை மருத்துவ துறையில் உள்ளவர்களை கொண்டு ஆய்வு செய்தால்தான் சரியாக இருக்கும்.

எங்களை பொருத்தவரை, இந்த விசாரணைக்கு எப்போதுமே முழு ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story