இடைத்தரகர்கள் நெல் கொள்முதல் நிலையங்களில் தலையிட்டால் குண்டர் சட்டம் - மதுரை கலெக்டர் எச்சரிக்கை


இடைத்தரகர்கள் நெல் கொள்முதல் நிலையங்களில் தலையிட்டால் குண்டர் சட்டம் - மதுரை கலெக்டர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 26 Dec 2021 7:55 PM IST (Updated: 26 Dec 2021 7:55 PM IST)
t-max-icont-min-icon

மதுரையில் நெல் கொள்முதல் நிலையத்தில் இடைத்தரகர்கள் தலையிட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் எச்சரித்துள்ளார்.

மதுரை,

மதுரை மாவட்டத்தில் குறுவை பருவத்தில் 25 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடம் இருந்து 17 ஆயிரத்து 416 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தற்போது சம்பா பருவத்தில் 42 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. 

இதில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ இடைத்தரகர்கள் தலையிட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்றும் மதுரை மாவட்ட கலெக்டர் அனிஷ் சேகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Next Story