கோவை: கார், மோட்டார் சைக்கிள் மீது மரம் விழுந்து விபத்து


கோவை: கார், மோட்டார் சைக்கிள் மீது மரம் விழுந்து விபத்து
x
தினத்தந்தி 27 Dec 2021 12:55 PM IST (Updated: 27 Dec 2021 12:55 PM IST)
t-max-icont-min-icon

மரம் விழுந்த நேரத்தில் அந்த வழியாக யாரும் செல்லாததால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

கோவை,

கோவையில் கார், மோட்டார் சைக்கிள் மீது மரம் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

கோவை காந்திபுரம் ராமர் கோவில் வீதியில் 30 ஆண்டு பழமை வாய்ந்த வாகை மரம் ஒன்று நின்றது. இன்று காலை 11.30 மணியளவில் திடீரென அந்த மரம் வேருடன் சாய்ந்து விழுந்தது. அப்போது அந்த மரமானது அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார், ஒரு மோட்டார் சைக்கிள் மீது விழுந்து விபத்துக்குள்ளானது. 

இதில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் சேதமடைந்தன. அதில் யாரும் இல்லாததாலும், மரம் விழுந்த நேரத்தில் அந்த வழியாக யாரும் செல்லாததாலும் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த மாநகராட்சி ஊழியர்கள் மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story