சென்னையில் புதுவருட கொண்டாட்டம்; பொதுமக்கள் ஒன்று கூட, இசை நிகழ்ச்சிகளுக்கு தடை


சென்னையில் புதுவருட கொண்டாட்டம்; பொதுமக்கள் ஒன்று கூட, இசை நிகழ்ச்சிகளுக்கு தடை
x
தினத்தந்தி 28 Dec 2021 10:42 PM IST (Updated: 28 Dec 2021 10:42 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் புதுவருட கொண்டாட்டத்திற்கு காவல் துறை பல கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது.


சென்னை,

தமிழகத்தின் சென்னையில் புதுவருடத்தினை முன்னிட்டு பொதுமக்கள் பல்வேறு கொண்டாட்டங்களில் ஈடுபடுவது வழக்கம்.  இந்த நிலையில், கொரோனா பாதிப்புகளால் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் கூடுதலாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது.  கொரோனா பாதிப்பு குறைந்துள்ள சூழலில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

எனினும், ஒமைக்ரான் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.  இந்த நிலையில், சென்னையில் புதுவருட கொண்டாட்டத்திற்கு காவல் துறை பல கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது.

இதன்படி, வருகிற 31ந்தேதி புதுவருட இரவு கொண்டாட்டம் என்ற பெயரில் பொதுமக்கள் ஒன்று கூடுவது தவிர்க்கப்பட வேண்டும்.  ரிசார்ட்டுகள், பண்ணை வீடு, அரங்குகள், கிளப்புகளில் வர்த்தகம் சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்த கூடாது.

ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகள், பண்ணை வீடுகளில் கேளிக்கை நிகழ்ச்சி மற்றும் இசை நிகழ்ச்சிகளை நடத்த கூடாது.  இதேபோன்று, மெரினா, எலியட்ஸ், பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் பொதுமக்கள் ஒன்று கூட வேண்டாம் என காவல் துறை அறிவுறுத்தி உள்ளது.


Next Story