சென்னையில் வரும் 31ந்தேதி இரவு பைக் ரேஸ் நடத்த தடை
சென்னையில் வரும் 31ந்தேதி இரவு பைக் ரேஸ் நடத்த காவல் துறை தடை விதித்து உள்ளது.
சென்னை,
சென்னையில் வருகிற 31ந்தேதி புதுவருட கொண்டாட்டத்தினை முன்னிட்டு காவல் துறை பல கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கிலான இந்த உத்தரவுகளின்படி, அடுக்குமாடி குடியிருப்புகள், வில்லா ஆகிய இடங்களில் ஒன்று கூடி புதுவருட நிகழ்ச்சிகளை நடத்த கூடாது என அறிவுறுத்தி உள்ளது. ஓட்டல்கள், தங்கும் வசதியுள்ள உணவு விடுதிகள் இரவு 11 மணிவரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
எனினும், சென்னையில் வரும் 31ந்தேதி புதுவருட கொண்டாட்டத்தினை முன்னிட்டு இரவு பைக் ரேஸ் நடத்த காவல் துறை தடை விதித்து உள்ளது.
இதேபோன்று, மெரினா கடற்கரை, போர் நினைவு சின்னம் முதல் காந்தி சிலை வரை வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. காமராஜர் சாலை, பெசன்ட் நகரை ஒட்டிய கடற்கரை சாலையில் வாகனங்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. வாகனங்களை அதிவிரைவாக இயக்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளது.
Related Tags :
Next Story