குடிசை மாற்று வாரியம் கட்டியுள்ள பழைய கட்டிடங்கள் உறுதித்தன்மையை ஆய்வு செய்ய வேண்டும்
குடிசை மாற்று வாரியம் கட்டியுள்ள பழைய கட்டிடங்கள் உறுதித்தன்மையை ஆய்வு செய்ய வேண்டும் விஜயகாந்த் வலியுறுத்தல்.
சென்னை,
தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னையை அடுத்த திருவொற்றியூரில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு திடீரென இடிந்து விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கட்டிடங்கள், மேம்பாலங்கள், அணைகள், இன்றளவும் உறுதியாக நிலைத்து நிற்கும் நிலையில், தற்போது உள்ள கட்டிடங்கள் சில ஆண்டுகளில் இடிந்து விழுந்து தரைமட்டம் ஆகிறது.
லஞ்சத்திற்கும், ஊழலுக்கும் அரசு அடிப்பணிந்து, உரிய நிதியை ஒதுக்காமல், தரமற்ற கட்டிடங்களை கட்டுவதாலேயே, சொற்ப காலத்தில் கட்டிடங்கள் இடிந்து விழும் அவலம் ஏற்படுகிறது. இனிவரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாத வண்ணம் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்டுள்ள பழைய கட்டிடங்களின் உறுதித்தன்மை குறித்து அரசு அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். ஆய்வின் முடிவில் இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டிடங்களை கண்டறிந்து அதனை முன்கூட்டியே அகற்ற நடவடிக்கை வேண்டும்.
இதன்மூலம் உயிர்சேதம் ஏற்படாமல் தடுக்க முடியும். மேலும், லஞ்சத்திற்கும், ஊழலுக்கும் அடிபணியாமல் உரிய நிதியை ஒதுக்க இனிமேல் கட்டப்படும் சாலைகள், கட்டிடங்கள், மேம்பாலங்கள், அணைகள் ஆகியவற்றை தரமானதாக கட்டி முடித்து, அதனை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story