ஸ்ரீபெரும்புதூர் பாக்ஸ்கான் ஆலை நிர்வாகத்தை மாற்றியமைக்க முடிவு...!


ஸ்ரீபெரும்புதூர் பாக்ஸ்கான் ஆலை நிர்வாகத்தை மாற்றியமைக்க முடிவு...!
x
தினத்தந்தி 29 Dec 2021 4:01 PM IST (Updated: 29 Dec 2021 4:01 PM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் ஆப்பிள் செல்போன் உதிரிபாகங்களை தயாரிக்கும் பாக்ஸ்கான் ஆலை நிர்வாகத்தை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் - சுங்குவார்சத்திரம் சிப்காட் தொழில்பூங்காவில் அமைந்துள்ள பாக்ஸ்கான் நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தில் ஆப்பிள் ஐபோன் உதரி பாகங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், பாக்ஸ்கான் ஆலையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் பெண் தொழிலாளர்கள் அந்த நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தங்கும் விடுதியில் உணவின் தரம் மற்றும் குறைபாடுகளைக் களையக்கோரி, கடந்த 18-ம் தேதி இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் குவிந்த பெண் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் போராட்டத்தை தொழிலாளர்கள் கைவிட்டனர். 

இந்நிலையில், தைவானை தலைமையிடமாக கொண்டுள்ள பாக்ஸ்கான் நிறுவனமும், அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட ஐபோன் நிறுவனமும் இந்த விவகாரத்தை தற்போது கையில் எடுத்துள்ளது. 

அந்த வகையில், ஸ்ரீபெரும்புதூர் பாக்ஸ்கான் ஆலை நிர்வாகத்தை மாற்றியமைக்க முடிவு பாகிஸ்கான் தலைமை நிர்வாகம் முடிவு செய்துள்ளது என ‘ராட்டர்ஸ்’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஸ்ரீபெரும்புதூர் பாக்ஸ்கான் ஆலை நிர்வாகத்தை மறுசீரமைப்பு செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், ஆலையில் மீண்டும் உற்பத்தி தொடங்கும் வரை தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படும்’ எனவும் பாக்ஸ்கான் தெரிவித்துள்ளது.

அதேவேளை, ஐபோன் உதிரிபாகங்களை தயாரிக்கும் ஸ்ரீபெரும்புதூர் பாக்ஸ்கான் ஆலையின் சூழ்நிலைகளை ஆய்வு செய்ய தன்னிச்சையான தணிக்கையாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொழிலாளர்கள் தங்கவைக்கப்படும் இடங்கள், உணவு பரிமாறும் இடங்கள் எங்களில் தர நிர்ணயத்தை எட்டவில்லை என்பது எங்களுக்கு தெரியவந்துள்ளது. இது தொடர்பாக விரைவான நடவடிக்கை எடுத்து தரத்தை உயர்த்த எங்கள் விநியோகஸ்தரிடம் கேட்டுக்கொண்டுள்ளோம். ஸ்ரீபெரும்புதூர் பாக்ஸ்கான் ஆலை கண்காணிப்பில் உள்ளது என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.  

Next Story