‘இந்துத்துவா படைகளின் புதிய இலக்கு கிறிஸ்தவர்கள்' ப.சிதம்பரம் குற்றச்சாட்டு


‘இந்துத்துவா படைகளின் புதிய இலக்கு கிறிஸ்தவர்கள் ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 30 Dec 2021 1:19 AM IST (Updated: 30 Dec 2021 1:19 AM IST)
t-max-icont-min-icon

‘இந்துத்துவா படைகளின் புதிய இலக்கு கிறிஸ்தவர்கள்' ப.சிதம்பரம் குற்றச்சாட்டு.

சென்னை,

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

‘மிஷனரிஸ் ஆப் சாரிட்டி தொடர்பான விவகாரத்தை பிரதான ஊடகங்கள் மறைத்துவிட்டதை நீங்கள் கவனித்தீர்களா? ஊடகங்களின் இந்த செயல் வேதனைப்படக்கூடியது. வெட்கக்கேடானது.

மிஷனரிஸ் ஆப் சாரிட்டி புதுப்பித்தலை மத்திய உள்துறை அமைச்சகம் நிராகரித்தது, இந்தியாவின் ஏழைகள் மற்றும் எளிய மக்களுக்கு சிறந்த சேவை செய்யும் அரசு சாரா அமைப்புகள் மீதான நேரடித் தாக்குதலாகும். இது கிறிஸ்தவ தொண்டு பணிகளுக்கு எதிரான எதிர்ப்பைக் காட்டுகிறது. முஸ்லிம்களுக்கு பிறகு, இந்துத்துவா படைகளின் புதிய இலக்கு கிறிஸ்தவர்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story