தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு


தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு
x
தினத்தந்தி 30 Dec 2021 2:57 PM IST (Updated: 30 Dec 2021 2:57 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது.

சென்னை,

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்ததால் அதன் விலையும் அதிகரித்தது. எனினும் தங்கம் விலை ஏற்றம் கண்டு வருவதும் பின்னர் குறைவதும் என இருந்து வருகிறது.

இந்நிலையில் தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.4,508-க்கு விற்பனை ஆகிறது. இதனால் சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.36,064-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதே போல் வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.10 குறைந்து, ரூ.65.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.65,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Next Story