வைகை, பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு


வைகை, பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x
தினத்தந்தி 31 Dec 2021 4:55 AM IST (Updated: 31 Dec 2021 4:55 AM IST)
t-max-icont-min-icon

பராமரிப்பு பணி காரணமாக வைகை, பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல்-கூடூர் மற்றும் சென்னை எழும்பூர்-விழுப்புரம் பிரிவு இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் கீழ்க்கண்ட ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்படுகிறது.

* மதுரை-சென்னை எழும்பூர் வைகை அதிவேக எக்ஸ்பிரஸ் (வண்டி எண்:12636), வரும் 5 மற்றும் 19-ந்தேதி விழுப்புரம்-எழும்பூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

* எழும்பூர்-காரைக்குடி பல்லவன் எக்ஸ்பிரஸ் (12605), வரும் 5 மற்றும் 19-ந்தேதிகளில் எழும்பூர்-விழுப்புரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் விழுப்புரத்தில் இருந்து மாலை 6.10 மணிக்கு புறப்படும்.

* சென்னை சென்டிரல்-விஜயவாடா பினாக்கி எக்ஸ்பிரஸ் (12712), வரும் 4-ந்தேதி சென்டிரல்-கூடூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் மாலை 4.20 மணிக்கு கூடூரில் இருந்து புறப்படும். இதைப்போல் விஜயவாடா-சென்னை சென்டிரல் பினாக்கி எக்ஸ்பிரஸ் (12711), வரும் 4-ந்தேதி கூடூர்-சென்னை சென்டிரல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story