தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .
சென்னை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. இந்த நிலையில், சென்னையில் நேற்று நண்பகல் முதல் கனமழை பெய்தது . பகல் 1 மணியளவில் தொடங்கிய கனமழை 8 மணி நேரத்திற்கும் மேலாக பெய்தது.தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
Related Tags :
Next Story